ஓபிஎஸ் மகனை எம்.பி.யாக குறிப்பிட்டுள்ள கல்வெட்டை அகற்ற வேண்டும் : அமமுக வலியுறுத்தல்

  அனிதா   | Last Modified : 17 May, 2019 09:30 am
remove-the-inscription-thanga-tamilselvan

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி. எனக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை அகற்ற வேண்டும் என தங்கத் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். 

தேனி மாவட்டம் குச்சனூர் கோவிலில், கோவில் நன்கொடையாளர்கள் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயர் " ரவீந்திரநாத் குமார் எம்.பி" என பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், "தனியார் கோவில் சார்பில் ரவீந்திநாத் குமார் எம்.பி. என பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை அகற்ற ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close