திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரே மேடையில் 6 சுயேட்சை வேட்பாளர்கள்!

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 11:47 am
thirupparankundram-byelection-independent-candidates-are-in-election-rally

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரே மேடையில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் (மே19) நடைபெற உள்ளது. இதில், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இன்று மாலையுடன் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர், ஆறுமுகம், பூவநாதன் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக மேடையில் பேசி மக்களுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் தோன்றியது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close