பிரிவினை பேசும் கமல் எதிர்ப்பை சந்தித்துதான் ஆக வேண்டும்: தமிழிசை

  அனிதா   | Last Modified : 17 May, 2019 11:57 am
kamal-s-opposition-should-be-met-tamilisai

காந்தியை கொன்ற கோட்சேவை தூக்கில் போட்டதோடு அந்த விவகாரம் முடிந்துவிட்டதாகவும், கமல் தான் தற்போது அதை பேசி பெரிதாக்கி இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் எடுபடாது" என்றும் தெரிவித்தார். 

கமல்ஹாசன் பேசிய கூட்டத்தில் கல்வீச்சு ஏற்பட்டதை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரிவினை கருத்து பேசும் கமல்ஹாசன் இது போன்ற எதிர்ப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். அதேசமயம் வன்முறை கலாச்சாரத்தை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை" என்றார் அவர்.

ஐந்து முறை காந்தியை சுட்டு கொள்ள முயன்ற கோட்சே தீவிரவாதி தானே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "கோட்சேவை தூக்கில் போட்டாயிற்று, அது முடிந்த கதை. தற்போது கமலால் இந்த விஷயம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதி என்று கூறும்பொழுது தான் மற்றவர்களின் மனம் புண்படுத்துகிறது" தமிழிசை பதிலளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close