சட்டம் - ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலாளர் திடீர் ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 17 May, 2019 11:50 am
chief-secretary-consulting-on-law-and-order

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற  இக்கூட்டத்தில், தமிழக காவல் துறை இயக்குநர் டி.கே ராஜேந்திரன், சென்னை காவல் துறை ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், சமூக வலைதள பயன்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்கள் மூலம் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கவும், வதந்திகள் பகிரப்படுவதை தவிர்க்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், வரும் 23ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சமூக வலைதளம் மூலம் என்னென்ன சர்ச்சைகள் ஏற்படும் எனவும், பொன்பரப்பி கலவரம் போல் மற்றுமொரு கலவரம் நடக்காமல் இருக்க, அசம்பாவிதங்களை தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close