தமிழகத்தில் 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிப்பு! - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 12:48 pm
madras-hc-gives-warning-to-ec

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி புதுச்சேரி உள்ளிட்ட 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் வாக்களிக்கவில்லை என்று ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து சாந்தகுமார் என்ற ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியாமல் போன ஆசிரியர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கையில், "தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 4லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 291 பேர் தபால் வாக்கு அளித்தனர். அதில், தகவல்கள் ஒத்துப்போகாத காரணத்தால் 12 ஆயிரத்து 915 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன" என பதில் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து நீதிபதிகள், " வரும் காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் முறையான ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற குளறுபடிகள் இருக்க கூடாது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close