அண்ணா பல்கலை. விவகாரத்தில் அரசின் தலையீடு இல்லை: முதல்வர் பதில்

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 12:47 pm
cm-edappadi-palanisamy-replied-to-surappa-s-complaint

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "தமிழக ஊடகங்கள், பத்திரிக்கைகள் கமலின் கருத்து குறித்து பேச வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே நானும் இதுகுறித்து கருத்துக் கூற இயலாது. 

ஆனால், தேர்தல் நேரத்தில் நடைபெறும் பிரச்சாரத்தின் போது, மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசினால், தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருவதால், அரசு இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்னையும் ஏற்படாது. 

தமிழகத்தில் பருவ மழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில் ஆட்சியர்கள் தலையிட்டு மக்களுக்கு குடிநீரை முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் தலையீடு எதுவும் இல்லை" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close