அறுதி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

  அனிதா   | Last Modified : 17 May, 2019 01:43 pm
the-rule-will-set-bjp-with-the-majority-pon-radha-krishnan

வரும் 23ஆம் தேதி பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாஜக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மத்தியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் கூறினார். 

மேலும், "காங்கிரஸ் தலைமையில் வரும் மே 21ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த கூட்டத்தை 23ஆம் தேதிக்கு மாற்ற காரணம், அனைத்து கட்சிகள் சேர்ந்தாளும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால்தான்.

வரும், 23ஆம் தேதி அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் போது, எதிர் கட்சிகளின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆலோசிக்கும் கூட்டமாக தான் அந்த கூட்டம் இருக்கும். தமிழகத்தில் 22 இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியை தொடரும் என்பதில் சந்தேகமில்லை எனவும் மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close