ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

  அனிதா   | Last Modified : 17 May, 2019 03:33 pm
the-chance-of-heavy-rainfall-in-one-or-two-places-in-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் குறிப்பாக உள்மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறையில் 4 செ.மீ, மழையும், சித்தேரியில் 3.செ.மீ  மழையும், நீலகிரி மாவட்டம் கொடநாடு, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரிக்கு மேல் பதிவாக கூடும். அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close