தமிழகத்தில் பல இடங்களில் மழை

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 08:21 pm
rain-in-many-places-in-tamil-nadu

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 

ஸ்ரீவில்லிபுத்தூர், உதகை, குன்னூர், கொடைக்கானல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அறை இடிந்தது. கொடைக்கானலில் கீழ் மற்றும்  நடுமலைப்பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. 

நெல்லை மாவட்டம் தென்காசி, வீகேபுரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. விருதுநகர் அருகே ஒ.கோவில்பட்டியில் இடியுடன் பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் 20 ஆடுகள் பலியானது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close