சென்னை டுமீங் குப்பத்தில் பயங்கர தீ விபத்து; குடிசைகள் எரிந்து நாசம்!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 11:36 am
fire-accident-at-chennai

சென்னை பட்டினப்பாக்கம் டுமீங் குப்பத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இருந்தும், அங்கிருந்தது குடிசைகள் என்பதால் தீ வேகமாக பரவியதில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. தீவிபத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close