வைகாசி விசாகத் திருவிழா! முருகப்பெருமான் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 10:35 am
vaikasi-visagam-at-lord-murugan-temples

வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்செந்தூர், திருத்தணி கோவில்களில் முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

முருகப்பெருமானின் அவதார நாளாக, வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை, திருத்தணி ஆகிய முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும், வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வைகாசி விசாக திருநாளை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்தும்,பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். அதே போன்று திருத்தணி, பழநியிலும் இன்று பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகள் மட்டுமின்றி, தமிழகத்தில் முருகப்பெருமான் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 

வைகாசி விசாகம் அன்று, முருகப்பெருமானை முறையாக விரதமிருந்து வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close