கல்வெட்டு விவகாரம்: ரவீந்திரநாத் குமார் கண்டனம்!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 01:26 pm
inscription-issue-ravindranath-kumar-condemns

கோவில் கல்வெட்டில் தனது பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டதற்கு அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய பணிக்காக நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு கோவிலில் பதிக்கப்பட்டுள்ளது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயருக்கு முன்பு தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது. 

தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில், வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பெயருக்கு முன்பு தேனி பாராளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரவீந்திரநாத்தின் பெயர் மற்றொரு கல்வெட்டு கொண்டு முழுவதுமாக மறைக்கப்பட்டது. 

இந்நிலையில், கோவில் கல்வெட்டில் தனது பெயருடன் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டதற்கு அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ரவீந்திரநாத் அளித்த புகாரின் பேரில், கல்வெட்டில் பெயர் பொறித்த முன்னாள் காவலர் வேல்முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close