சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 01:59 pm
chance-for-light-rainfall-in-chennai

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரி கடல் பகுதி வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருச்சி விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இன்று லேசான மழைக்கு வாய்ப்பு, வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக  29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close