டிராக்டர் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சோகம்

  முத்து   | Last Modified : 18 May, 2019 03:38 pm
the-tractor-kitty-s-father-and-his-son-s-death-tragedy

அரக்கோணம் அருகே இன்று டிராக்டர் மோதி நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் மீது மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிராக்டர் மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் தந்தை ரஜினி, மகன் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த ரஜினி மற்றும் தினேஷின் உடல்களுடன் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close