தமிழகத்தில் நாளை 4 தொகுதிகளில் இடைத்தேர்தல்!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 03:59 pm
tn-byelection-for-4-assembly-constituencies-tomorrow

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை(மே 19) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் 63 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தமாக, இத்தொகுதியில் 68 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 63 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

சூலூர் தொகுதியில் 22 பேரும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டியிடுவதால் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்துள்ளார். மேலும், "மே 19 அன்று நடைபெறவுள்ள 4 சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு உள்ளிட்ட தமிழக தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 1300 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் 15,939 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். 

இதுதவிர, விவிபேட் மற்றும் இ.வி.எம் மெஷின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 

இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்தல் பணிகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close