ஏசி வெடித்து 3 பேர் இறப்பு: சொத்துக்காக மூத்த மகனே கொன்று நாடகமாடியது அம்பலம்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 06:56 pm
3-killed-in-ac-explosion-elder-son-arrest

திண்டிவனத்தில் ஏசி  இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பற்றிய தீயில் சிக்கி தாய், தந்தை, மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், சொத்துக்காக மூத்த மகனே, தனது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் கடந்த 15-ஆம் தேதி ஏசி இயந்திரம் வெடித்து தீபற்றி எரிந்ததில் சிக்கி தம்பதி ராஜு, கலைச்செல்வி, மகன் கெளதமன் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில், தம்பதி ராஜு, கலைச்செல்வியின் மூத்த மகன் கோவர்த்தனன் மீது  சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சொத்துக்காக தனது மனைவியுடன் சேர்ந்து பெற்றோர், சகோதரரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

3 பேரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து ஏசி வெடித்து இறந்ததாக  நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து, 3 பேரை கொன்ற வழக்கில், கோவர்த்தனன், அவரின் மனைவி தீபாகாயத்திரியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

உடலில் தீப்பற்றியவுடன் காப்பாற்றுங்கள் என கதறிய மூவரையும் கோவர்த்தனன் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும், சகோதரர் கெளதமனுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கோவர்த்தனன் ஆத்திரம் அடைந்து கொலை செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close