அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர்- காவல்துறை இடையே வாக்குவாதம்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:55 am
dmk-police-clash-at-aravakurichi

 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தோட்டக்குறிச்சியில்  திமுகவினருக்கும், காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடிக்கு திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வருவதையொட்டி, அப்பகுதிகளில் திமுக தொண்டர்கள் திரண்டனர். இது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, அவர்களை விலகிச் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் திமுகவினருக்கும், காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குசாவடிக்கு வந்தார். தொடர்ந்து அவர் திமுக தொண்டர்களிடையே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தொண்டர்கள் சுமார் 200 மீட்டருக்கு அப்பால் தான் நின்று கொண்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் மக்களிடையே திமுகவிற்கு வாக்களிக்கும் படி கூறி வந்தனர். ஆனால், அந்த இடத்தில் அவர்களை நிற்க விடாமல் போலீசார் துரத்தியுள்ளனர். 

ஆனால், காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. நீங்கள் மக்களிடம் கேளுங்கள். காவல்துறை எவ்வளவு அராஜகமாக நடந்துகொள்கிறது என்று. அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து, மிகவும் மோசமான ஒரு முறையை கையாண்டு வருகிறது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close