அரவக்குறிச்சியில் ஆம்னி பேருந்துகளில் போலீசாரின் தீவிர சோதனையால் பரபரப்பு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 10:39 am
aravakurichi-by-election-update

அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி அண்ணா நகர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க ஆம்னி பேருந்துகளில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை செய்ததால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் வாக்களிக்க வந்தவர்களிடம் அவர்கள் வந்த பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பேருந்தில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடந்ததால் அப்பகுதி பரபரப்பானது.

மேலும், மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜ் நேரில் வந்து பேருந்தில் ஆய்வு செய்தார். 

இது தொடர்பாக காவல்துறையினர் பேசும்போது, "இது வழக்கமான சோதனை தான். தொகுதிக்குசம்மந்தமில்லாத நபர்கள் யாரும் வர அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில் தான் சோதனை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close