அதிமுக, திமுக கட்சிகள் முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர்: சத்யபிரதா சாஹூ

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 01:02 pm
aiadmk-and-dmk-parties-have-filed-a-complaint-satyabrata-sahoo

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலும் வாக்கு சாவடிகளில் முறை கேடு நடப்பதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 11 மணி நிலவரப்படி சூலூரில் 31.55% அரவகுறிச்சியில் 34.89% திருப்பரங்குன்றத்தில் 30.02% ஒட்டப்பிடாரத்தில் 30.28%  என 4 தொகுதிகளிலும் சேர்ந்து மொத்தம் 31.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. 13 வாக்குசாவடி மையத்தில் நடைபெற்று வரும் மறுவாக்குபதிவில் பண்ருட்டியில் அதிகம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலும் வாக்கு சாவடிகளில் முறை கேடு நடப்பதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமூகமான முறையில் வாக்கு பதிவு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட தேர்தல்  அதிகாரி மூலம் சரி செய்யப்படும்.

வாக்கு சாவடிகளில் பதட்டமான சூழல் ஏற்படுவதை தடுப்பதற்காக அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 656 வாக்கு சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து வாக்குசாவடிகளை  கண்காணித்து வருகின்றனர். 

வாக்குபதிவில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனுக்குடன் அனுப்பி தீர்வு காணப்படும். 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் முறையில் வாக்களிக்க வழிவகைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close