தமிழகத்தில் இன்று மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்று (திங்கட்கிழமை) லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுக் கூடும் எனவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.