காங்கிரஸ் ஒரு பெருங்காய டப்பா: இல.கணேசன்

  அனிதா   | Last Modified : 20 May, 2019 10:56 am
congress-is-a-asafoetida-box-ila-ganesan

அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தமிழக கருத்துக் கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றுமில்லை என்றும் தமிழகத்தில் 2 இடங்களில் வெற்றி பெற்றாலும் அது பாஜகவுக்கு கிடைத்த முழு வெற்றி தான் எனவும் தெரிவித்தார். மேலும், அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது என கூறினார். 

விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிக்கப்படுவதற்கு முந்தைய அரசு அனுமதி கொடுத்தது தான் காரணம் என குறிப்பிட்ட அவர், நிலத்தடியில் எரிபொருள் கிடைக்கிறதா என ஆய்வு செய்யலாம் என்ற முடிவை பிரதமர் எடுக்கவில்லை என்றும், அந்நிய நாடுகளிடம் எரிபொருள் வாங்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றுதான் பிரதமர் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close