கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: முதலமைச்சர் பழனிசாமி

  அனிதா   | Last Modified : 20 May, 2019 11:37 am
election-polls-result-are-just-padding-chief-minister

தமிழகத்தை பொருத்தவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெறும் கருத்து திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை பொருத்தவரை கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்பு என்றும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார். 2016ஆம் நடைபெற்ற கருத்து கணிப்பில் அதிமுக வெற்றி பெறாது என கூறிய நிலையில் அதிமுகவே வெற்றி பெற்றது என குறிப்பிட்ட அவர், அதேபோன்று அனைத்து தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என கூறினார்.  

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது. அதே நேரம் மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் திட்டம் கொண்டுவரப்படுகிறது. சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை தடுக்கவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவுமே இது போன்ற சாலை திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close