கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்ற கருத்து கணிப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை என்றும், மக்களின் கணிப்பு என்ன? என்பது 3 நாட்களில் தெரிந்துவிடும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்பது குறித்து தேர்தல் முடிவுக்கு பின் தெரிவிக்கப்படும் என கூறினார்.
newstm.in