ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 01:34 pm
thermal-breeze-in-one-or-two-places

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close