மத்தியில் காங்கிரஸ்-மாநில கட்சிகளின் கூட்டணி அமையும்: வைகோ

  அனிதா   | Last Modified : 20 May, 2019 02:42 pm
the-rule-will-set-alliance-between-congress-and-state-parties-vaiko

மத்தியில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் கூட்டணி அரசு அமையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை சிறப்பு நீதிமன்ற வளாகம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் மத்தியில் காங்கிரஸ், மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும் எனவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் வெட்ட வேதாந்தா நிறுவனத்திற்கு  அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாகவும், நாற்று நட்ட வயலில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை எனவும் குறிப்பிட்ட அவர், இதற்கு தமிழக அரசே முழு காரணம் என குற்றம்சாட்டினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close