தொழில்நுட்ப பணியால் சென்னை வரும் ரயில்கள் தாமதமாகும்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 03:41 pm
trains-coming-in-chennai-due-to-technical-work-are-delayed

தொழில்நுட்ப பணிகள் காரணமாக  பெங்களூருவில் இருந்து சென்னைக்கு  வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில், அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால் மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ரயில் சேவை தாமதமாகும்.

அதன்படி, மே 21-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் டபுள் டெக்கர் ஏ.சி.ரயில் 80 நிமிடங்களும், பெங்களூருவிலிருந்து வரும் பிருந்தாவன் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு 60 நிமிடங்களும் தாமதமாக வந்தடையும் என குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close