தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
RTE எனப்படும் இலவச, கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை இலவசமாக கற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை நடைபெற்றது.
தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட 1.21 லட்சம் இடங்களுக்கு, 1 லட்சத்து 20,989 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
newstm.in