அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் மாற்றம்: தேர்தல் ஆணையம் தகவல்

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 11:46 am
voting-schedule-changes-in-aravakurichi

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை சிறியதாக இருப்பதால், கட்சிகளின் முகவர்கள் வந்து செல்வதற்கு சரியாக இருக்காது என்றும், எனவே வாக்கு எண்ணிக்கையை வேறு பெரிய அறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். 

அதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தற்போது சாத்தியமாகாது. எனவே 14 மேஜைகளுக்கு பதிலாக 8 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இதனால் 17 சுற்றுகளுக்கு பதிலாக 32 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

வழக்கமாக மற்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் 17 சுற்றுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close