ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

  அனிதா   | Last Modified : 21 May, 2019 01:10 pm
in-one-or-two-places-thunder-lightning-with-provide-moderate-rainfall

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close