வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் அனுமதியில்லை: சத்யபிரதா சாஹு

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 01:30 pm
cellphones-are-not-allowed-inside-of-counting-centre-tn-chief-election-officer

வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் மொத்தம் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூராக உள்ள பொருட்கள் உள்ளே எடுத்து செல்ல அனுமதியில்லை. பேப்பர், பென்சில் மட்டுமே அனுமதிக்கப்படும். பேனா எடுத்துச்செல்ல கூடாது. 

முகவர்களுக்கு தேவையான அனைத்தும் 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வெளியில் செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட சில அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும், அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சில விவிபாட்கள் எண்ணப்படும். மேலும், வாக்குபதிவு இயந்திர பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். அதற்கு  ஒரு மணி நேரம் முன்னரே அதிகாரிகள், முகவர்கள் என அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவரவர்களது இடங்களில் அமரவைக்கப்படுவார்கள்.

ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி இருக்குமாயின் அந்த 6 தொகுதிக்கான வாக்குகளும் ஒன்றாக சேர்த்து மொத்தமாக எண்ணப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close