அதிமுக இரண்டாக பிரிந்திருப்பது மற்றவர்களுக்கே சாதகம்: கருணாஸ்

  அனிதா   | Last Modified : 21 May, 2019 03:57 pm
the-aiadmk-separation-is-the-advantage-for-others-karunas

அதிமுக இரண்டாக பிரிந்திருப்பது மற்றவர்களுக்கு சாதகமாக உள்ளது என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். 

மதுரை பாண்டி கோவில் பகுதியில் நாடக நடிகர்கள் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கொடுத்த நோட்டீஸ் நம்பக தன்மையுடன் இல்லை. அதனால்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொய் கணிப்பு தான் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு திருவாடனை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்று ஒரு கருத்து கணிப்பு கூட சொல்லவில்லை. ஆனால் நான் வெற்றிபெற்றேன். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுப்பார்கள். 

அமமுக பொதுச்செயலாளர் சசிலா வெளியே வந்தால் தான் கட்சியின் நிலைபாடு குறித்து தெரியும். அதிமுக இரண்டாக பிரிந்து இருப்பது மற்றவர்களுக்கு சாதகமாக உள்ளது. மோடி ஆட்சியில் அடித்தட்டு மக்கள் உட்பட பல மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி சென்றடையவில்லை.

இந்திய மக்கள் அமைதியாக சகோதரத்துவத்துடன் வாழ ஒரு நிலையான அரசு வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம். தேர்தலை பொருத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close