சென்னையில் வாக்கு எண்ணும் இடங்களில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் ராணிமேரி, லயோலா, அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 2,500 போலீசாரும், முக்கிய சாலைகளில் 2,500 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.
மே 23-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in