பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... 27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது

  ராஜேஷ்.S   | Last Modified : 21 May, 2019 09:40 pm
shocking-news-for-the-people-water-lorries-do-not-run-since-27th

தமிழகம் முழுவதும் வரும் 27 ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் ஓடாது என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

நிலத்தடி நீரை எடுக்க அரசு விதிக்கும் விதிமுறைகளை கண்டித்து தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாகவும், இதனால், தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் லாரிகளும், சென்னையில் மட்டும் 5 ஆயிரம் லாரிகளும் ஓடாது என்றும் இச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிவரும் நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு தங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close