தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி!

  ராஜேஷ்.S   | Last Modified : 21 May, 2019 10:17 pm
wineshops-close-to-two-days-in-puducherry

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல் துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 2 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட, அம்மாநில கலால்துறை துணை ஆணையர் தயாளன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையையொட்டி வரும் 2 3-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close