காங்கிரஸ் கட்சியினர் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 10:38 am
congress-party-complaint-in-dgp-office

காங்கிரஸில் இருந்து திமுக கூட்டணி விலகுவதாக நேற்று சமூகவலைதளங்களில் காங்கிரஸின் அறிக்கை ஒன்று வெளியானது. இந்த போலி அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரசுடன் திமுக கூட்டணியில் உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நேற்று காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகுவதாக காங்கிரஸின் லெட்டர்பேடில் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்ட காங்கிரஸின் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

பின்னர், இந்த அறிக்கை போலியானது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் தெரிவித்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் சமயத்தில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close