காவிரி ஒழுங்காற்றுக்குழு நாளை கூடுகிறது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுமா?

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 03:38 pm
cauvery-water-regulation-committee-to-meet-thursday

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், தமிழகத்திற்காக காவிரி நதிநீரை திறந்துவிட வலியுறுத்தப்படவுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. காவிரி நதி நீரை குறிப்பிட்ட மாநிலங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் பகிர்ந்துகொள்வதற்காக இந்த அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதியும், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை இம்மாதங்களில் நடைபெறவுள்ளன. 

வருகிற ஜூன் 12ம் தேதி தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீர் திறந்துவிட வேண்டும் என்ற நிலையில், நாளை காவிரி  ஒழுங்காற்று கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. 

நாளை நடைபெறவுள்ள காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில், தமிழகத்தில் சாகுபடிக்காக காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர். 

இந்த இரு அமைப்புகளிலும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close