வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ

  அனிதா   | Last Modified : 22 May, 2019 04:39 pm
counting-of-votes-end-time-can-not-be-calculated-sathyaprata-sahoo

வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், முகவர்கள் என அனைவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் பணியமர்த்தப்படுவார்கள். தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் பார்வையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே தேர்தல் அதிகாரி முடிவை அறிவிப்பார்.

வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் அறை சீல் உடைத்து பெட்டிகள் எடுக்கப்படுவது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

results.eci.gov.in என்ற இணையதளத்திலும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் முடிவுகளை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பிற்காக 19 கம்பெனி மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் (1520 பேர்)  62 கம்பெனி துணை ராணுவப்படையினரும் (4960 பேர்) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அது தவிற கூடுதல் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறையினர் 31 ஆயிரம் பேரும், சென்னைக்கு 5 ஆயிரம் பேரும் என மொத்தம் 36 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகளும், மத்திய சென்னையில் குறைந்தபட்சம் 19 சுற்றுகளும் நடைபெறவுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் காலநேரத்தை கணக்கிட முடியாது என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close