தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம்?

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 04:54 pm
ec-announced-there-is-some-delay-for-announcing-results

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் வழக்கத்தை விட 5 மணி நேரம் தாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே23) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த முறை தேர்தலில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆகலாம் என  தேர்தல் ஆணைய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் இயந்திரங்களில் (ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 விவிபேட் இயந்திரங்கள்) உள்ள ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டிய சூழ்நிலை உள்ளதால், முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close