பாஜகவின் முன்னிலை நிலவரம் மாற வாய்ப்புள்ளது: திருநாவுக்கரசர்

  அனிதா   | Last Modified : 23 May, 2019 12:30 pm
the-bjp-leades-may-change-at-the-end-of-the-time

பாஜக கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறுதி நேரத்தில் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்பது எதிர்பார்த்ததுதான் என தெரிவித்தார். திருச்சியில் எதிர்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் நாங்கள் பணம் கொடுக்காமல் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளோம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு பிறகு அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த ஆட்சி கவிழ்க்கப்படுமா?  மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து கவனியுங்கள். பாஜக கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறுதி நேரத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் தலைவர் ராகுல் காந்திக்கு வயதும் வாய்ப்பும் இருக்கிறது என குறிப்பிட்டார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close