பெரம்பூர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைப்பு: போலீசார் குவிப்பு

  அனிதா   | Last Modified : 23 May, 2019 04:47 pm
vote-counting-stopped-in-perambur-constituency

பெரம்பூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை ராணி மேரி கல்லூரியில் பெரம்பூர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்கு இயந்திரத்தில் உள்ள எண்ணுக்கும், சீல்வைக்கபட்ட பெட்டியின் மேல் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறி அதிமுக முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, அப்பகுதியில்  காவல்துறை, மத்திய தொழிற் பாதுகாப்புபடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில், தற்போது வரை 4 சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close