தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்; இருந்தும் மக்கள் பணி தொடரும்- தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 05:13 pm
tamilisai-press-meet

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 340க்கும் மேலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது பெரும்பாலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழகத்தில் புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 39 தொகுதிகளில்(வேலூர் தவிர) திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேனி மற்றும் சிதம்பரம் தொகுதியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. தொங்கு பாராளுமன்றமாக அல்லாமல் தங்கும் பாராளுமன்றமாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

ஆனால், தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள். தூத்துக்குடியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை விரைவில் உணர்வார்கள்; அதற்காக வருந்துவார்கள். எனினும், எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை. தமிழக மக்கள் மீது எந்த கோபமும் இல்லை. தூத்துக்குடி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நான் குறித்து வைத்துள்ளேன். எடுத்துக்காட்டாக, குலசேகரப்பட்டினத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதனால் நிறைய பேருக்கு அங்கு சிறுநீரக கல் பிரச்சினை உள்ளது. இதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்று கூறினேன். அதன்படி, நான் தூத்துக்குடியில் தோற்றாலும், அந்த தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய அரசு உதவியுடன் உங்கள் முயற்சி செய்வோம். அங்கு மருத்துவ முகாம் நடத்தப்படும். தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். 

தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தமிழகத்தில் பாஜக வலுப்பெற வேண்டும்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். மக்கள் நம்பிக்கையை பெரும் அளவிற்கு நாங்கள் உழைத்தோம்; ஆனாலும் மக்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை ஆத்ம பரிசோதனை செய்யும் நிலையில் இருக்கிறோம்" என்று பேசியுள்ளார். 

newstm.in

Election Results 2019 LIVE Updates: பாஜக 350+ மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close