வெற்றி - தோல்வி எல்லாம் சகஜமப்பா! - டிடிவி தினகரன் ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 07:29 pm
ttv-dinakaran-tweet

தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  

— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 23, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close