நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி வாகை சூடிய தொல். திருமாவளவன்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 03:27 pm
thol-thirumavalavan-won-in-chidambaram-constituency

நீண்ட இழுபறிக்கு பிறகு சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிட்ட நிலையில், சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். 

நேற்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி, புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகள் வெற்றி பெற்றது. அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். 

இந்த சூழ்நிலையில், நேற்று சிதம்பரம் தொகுதியில் மட்டும் நள்ளிரவு வரை இழுபறி நிலை நீடித்து வந்தது. திருமாவளவனை எதிர்த்து அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிட்டிருந்தார்.

சந்திரசேகர் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தனர். நேற்று மாலை திருமாவளவன் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.இதனால் அவரது வெற்றி உறுதியானதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இரவு நிலவரப்படி, மீண்டும் சரிவை சந்தித்தார். சந்திரசேகர் 2,000 வாக்குகள் முன்னிலை. 

பின்னர் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் திருமாவளவன் 300 வாக்குகள் முன்னிலை பெற்றார். இறுதியாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. கடைசி சுற்றின் போது சிறிது நேரம் எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. 

பின்னர் நள்ளிரவுக்கு பிறகே முடிவானது அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இருந்து 2வது முறையாக தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். திருமாவளவன், சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

முன்னதாக தொல்.திருமாவளவன் 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close