தாமரை மலர தண்ணீர் வேண்டும்: கே.எஸ். அழகிரி

  அனிதா   | Last Modified : 25 May, 2019 09:44 am
lotus-blossom-needs-to-water-ks-azhagiri

தாமரை மலர வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, " வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல. மாவீரன் நெப்போலின், காமராஜர், அண்ணா உள்ளிட்ட பெருந்தலைவர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். அதேபோல், தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல. 

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அவர்,  தாமரை மலர வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலர முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

மேலும், தமிழகம் தனித்து விடப்படும் என்ற கருத்து எழுந்து வருவது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியா கூட்டாட்சி தத்துவம் அடிப்படையில் இயங்கிவருகிறது. அரசியல் சட்டத்தின்படி மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டங்களும், நிதியும் ஒதுக்கவேண்டும். எனவே தமிழகத்தை தனித்துவிட முடியாது என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close