ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 11:32 am
delhi-congress-working-committee-cwc-meeting-underway-at-party-office

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி உறுப்பினர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டமானது நடைபெறுகிறது.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக நேற்று தகவல் வெளியானது. எனவே இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சிதம்பரம், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close