பஞ்சு மூட்டை குடோனில் திடீர் தீ விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதம்

  அனிதா   | Last Modified : 25 May, 2019 01:19 pm
a-fire-broke-out-in-the-cotton-bundle

கோவையை அடுத்த இருகூரில் உள்ள பஞ்சு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின. 

கோவையை அடுத்த இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோனில் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 7 வருடங்களாக பஞ்சு மொத்த விற்பனை செய்யும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த குடோனில் வட இந்தியவை சேர்ந்த10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை குடோனில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close