தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...

  அனிதா   | Last Modified : 25 May, 2019 03:18 pm
the-chance-for-heavy-rainfall-in-one-or-two-places

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி,மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், புத்தான் அணைக்கட்டு பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகி ளது. பேச்சிப்பாறை சூரளகோடு, சிவலோகம் மற்றும் சிவகங்கை நகர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close