பிரதமர் மோடி பதவியேற்பு: ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 02:29 pm
ops-eps-are-to-attend-bjp-alliance-meeting

வருகிற 30ம் தேதி மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைவதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைகிறது.

இந்த நிலையில், இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிகாரபூர்வமாக பிரதமர் தேர்வு, புதிய அமைச்சரவை ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் சென்றுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close