டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 03:15 pm
tancet-exam-date-is-extended-anna-university

பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' (TANCET ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மே 31ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பி.இ. படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுவை எழுத வேண்டியது அவசியம். முன்னதாக இரண்டு தேர்வுகள் இருந்த நிலையில், மாணவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப, ஒரே பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' (TANCET ) நுழைவுத் தேர்வுக்கு மே மாதம் 8ம் தேதி முதல்  மே 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  டான்செட் தேர்வுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இதுவரை எம்.பி.ஏ படிப்பிற்கு 16427பேரும், எம்.சி.ஏ.விற்கு 4672 பேரும், எம்.இ,எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பிற்கு 10,288 பேரும் என மொத்தம்  31387 பேர் டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ம் தேதிய காலை 10 முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும்,  எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close