ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை

  முத்து   | Last Modified : 25 May, 2019 08:57 pm
from-june-1-beach-chengalpattu-express-fast-train-service

10 மாதங்களுக்கு பின்னர்  வரும் ஜூன் 1 முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே புறநகர் விரைவு (FAST)ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து,  சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,  வரும் ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் மார்க்கத்தில் நெரிசல் நேரத்தில் புறநகர் விரைவு ரயில் சேவை இயக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் விரைவு (FAST) ரயில் நேரம் 

காலை 7.50, 8.05, 8.25 மற்றும் 8.50 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை இடையே புறநகர் விரைவு ரயிலும், காலை 7.05 மற்றும் 8.00 மணிக்கு திருமால்பூர் - கடற்கரை இடையே விரைவு ரயிலும், மாலை 6.13 மணிக்கு சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே விரைவு ரயிலும் இயக்கப்படுகிறது. 

மேலும், சென்னை கடற்கரை - புதுச்சேரி இடையே நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை  ஜூன் 1 முதல் எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close